அயர்லாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய 'ஏ' அணி வெற்றி

கோப்புப்படம்
இந்திய ‘ஏ’ ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.
ஜன்ட்ஹோவன்,
இந்திய 'ஏ' ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி மீண்டும் அயர்லாந்தை சந்தித்தது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6-1 கோல் கணக்கில் வென்றிருந்தது.
இந்திய அணியில் முகமது ரஹீல் முசீன் 2 கோலும், உத்தம் சிங், கேப்டன் சஞ்சய், அமன்தீப் லக்ரா, வருண்குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய 'ஏ' அணி அடுத்து நாளை பிரான்சுடன் மோதுகிறது.
Related Tags :
Next Story