அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா தோல்வி


அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 26 Nov 2025 7:15 AM IST (Updated: 26 Nov 2025 7:15 AM IST)
t-max-icont-min-icon

தென்கொரியாவை சாய்த்து இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இபோ,

6 அணிகள் இடையிலான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடந்து வருகிறது. மழையால் தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. தொடக்க ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தென்கொரியாவை சாய்த்து இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இந்திய அணியில் அபிஷேக் (33-வது நிமிடம்), ஷிலானந்த் லக்ரா (57-வது நிமிடம்) கோல் அடித்தனர். பெல்ஜியம் தரப்பில் ரோமன் (17-வது, 57-வது நிமிடம்) 2 கோலும், நிகோலஸ் டி கெர்பெல் (45-வது நிமிடம்) ஒரு கோலும் போட்டனர்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.

1 More update

Next Story