ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்


ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்
x

image courtesy:twitter/@TheHockeyIndia

இந்த தொடரில் ஆஸ்திரேலியா பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும்.

ஜோஹர் பாரு,

ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சந்தித்தன.

பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1 More update

Next Story