ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்


ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்
x

இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் மோத உள்ளது.

ராஜ்கிர்,

12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ள இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் (இரவு 7.30 மணி) மல்லுக்கட்டுகிறது. லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் டிரா கண்டது.

அடுத்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. சூப்பர்4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட முடியும். சீனா அணியை பொறுத்தமட்டில் ஒரு தோல்வி (மலேசியாவுக்கு எதிராக), ஒரு வெற்றியுடன் (தென்கொரியாவுக்கு எதிராக) 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் இந்திய அணி, சீனாவை (4-3) வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story