ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியாவுக்கு வர மறுக்கும் பாகிஸ்தான் அணி


ஆசிய கோப்பை ஆக்கி:  இந்தியாவுக்கு வர மறுக்கும் பாகிஸ்தான் அணி
x

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

கராச்சி,

12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகி விட்டது. இதனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளுமா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் சார்பில் சர்வதேச ஆக்கி சம்மேளனம் மற்றும் ஆசிய ஆக்கி சம்மேளனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு விரைவில் எட்டப்படும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story