ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தல்

image courtesy:twitter/@TheHockeyIndia
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை (4-3) போராடி வென்றது.
ராஜ்கிர்,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சீனாவை (4-3) போராடி வென்றது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்தியா தரப்பில் ஹர்பன்ப்ரீத் சிங் 2 கோல்களும், மந்தீப் சிங் ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் கோசை கவாபே 2 கோல்கள் அடித்தார்.