அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி 'சாம்பியன்'


அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி சாம்பியன்
x

கோப்புபடம்

தினத்தந்தி 21 July 2025 6:30 AM IST (Updated: 21 July 2025 6:30 AM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய கடற்படை அணியுடன் மோதியது.

சென்னை,

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய கடற்படை அணியுடன் மல்லுக்கட்டியது.

இதில் இந்தியன் ரெயில்வே அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது. ரெயில்வே அணியில் ஷிவம் ஆனந்த் (8-வது நிமிடம்), பங்கஜ் ராவத் (37-வது நிமிடம்), சயத் நியாஸ் ரஹிம் (57-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய கடற்படை அணியில் அகிப் ரஹிம் ஆரிப் 15-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழமண்டலம் எம்.எஸ்.நிறுவன சேர்மன் எம்.எம்.முருகப்பன் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்ற ரெயில்வே அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பரிசை வழங்கினார். 2-வது இடம் பெற்ற கடற்படை அணிக்கு ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது.

1 More update

Next Story