யு19 உலகக் கோப்பை: இங்கிலாந்து , பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஜார்ஜியா,
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், ஹராரேயில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (சி பிரிவு) 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. அந்த பிரிவில் இங்கிலாந்து (3 வெற்றி), பாகிஸ்தான் (2 வெற்றி, ஒரு தோல்வி), ஜிம்பாப்வே (2 தோல்வி, ஒரு முடிவில்லை) முறையே டாப்-3 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு (சூப்பர்6) தகுதி பெற்றன.






