நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு
x
தினத்தந்தி 9 Jan 2026 7:07 AM IST (Updated: 9 Jan 2026 9:43 AM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி தொடங்குகிறது. அதேபோல், டி20 தொடர் 21ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் திலக் வர்மா இடம்பெற்றிருந்தார்.

இதனிடையே, விஜய் ஹசாரே தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சிகிச்சைக்குப்பின் ஐதராபாத் சென்றுள்ள திலக் வர்மா ஓய்வில் இருப்பதாகவும், ஓய்வு முடிந்து மீண்டும் பயிற்சிக்கு வந்தப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலக் வர்மா பங்கேற்காததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story