எஸ்.ஏ. டி20: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டர்பன்,
4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில் டர்பனில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், 2 முறை சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 50 ரன்னும், ஜோர்டான் ஹெர்மான் 41 ரன்னும் சேர்த்தனர். தொடர்ந்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story






