உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினால்...பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை


உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினால்...பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை
x

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினால் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துபாய்,

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்காளதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்காளதேசம் தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ள வங்காளதேசத்துக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று கூறுகையில், ‘20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுமா? இல்லையா? என்பது குறித்து அரசே இறுதி முடிவு எடுக்கும். என்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினால் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு அணியுடனும் இருதரப்பு போட்டிகள் விளையாட முடியாது, பிஎஸ்எல் தொடரில் விளையாட வெளிநாட்டு வீரர்களுக்கு தடையில்லா சான்று (NOC) வழங்கப்படாது, ஆசியக் கோப்பை தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story