அது எனக்கு பிடிக்கவில்லை..தோனிக்கும் இதே மாதிரி நடந்துள்ளது: விராட் கோலி


அது எனக்கு பிடிக்கவில்லை..தோனிக்கும் இதே மாதிரி நடந்துள்ளது: விராட் கோலி
x

பரிசளிப்பு நிகழ்வின் போது வர்ணனையாளர்களின் கேள்விக்கு விராட் கோலி பதிலளித்தார்.

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இதன்படி, இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று பகல்–இரவு போட்டியாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றியை ருசித்தது.

விராட் கோலி 93 ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்தப் போட்டியில் நேற்று ஒரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரோகித் அவுட் ஆனவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

விராட் கோலி மைதானத்திற்குள் வருவதை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் இவ்வாறு செய்தனர். இது குறித்து பரிசளிப்பு நிகழ்வின் போது வர்ணனையாளர்கள் விராட் கோலியிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த விராட் கோலி, “ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும் போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லை. இதேபோல் தோனிக்கும் அடிக்கடி நடந்துள்ளது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட் ஆகி வெளியேறும் வீரர் இதை பெரிதாக விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். நான் என் விளையாட்டில் தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். எனக்கு இப்படியான வரவேற்பு அளிப்பதற்காக ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக உணர்கிறேன்” என்றார்.

1 More update

Next Story