பிக்பாஷ் லீக்: ஹோபர்ட் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்னி


பிக்பாஷ் லீக்: ஹோபர்ட் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு  முன்னேறிய சிட்னி
x

ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்,

மெல்போர்ன்,

பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சிட்னி அணியில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார், பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார். ஸ்டீவ் ஸ்மித் 65 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. ஹோபர்ட் அணியில் ரிலீ மெரிடித் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 199 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் 17.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

25ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிட்னி - பெர்த் அணிகள் மோத உள்ளன.

1 More update

Next Story