பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டி: பெர்த் அணிக்கு 133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிட்னி

பெர்த் அணியில் ஜி ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மெல்போர்ன்,
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிட்னி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பெர்த் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிட்னி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஸ்மித் , ஹென்ரிக்ஸ், பிலிப்ஸ் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு சிட்னி அணி ஆட்டமிழந்தது. பெர்த் அணியில் ஜி ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 133 ரன்கள் எடுத்து சாம்பியன் ஆகும் முனைப்பில் பெர்த் அணி விளையிடுகிறது.
Related Tags :
Next Story






