3வது ஒருநாள் போட்டி: ஹாரி புரூக், ரூட் சதம்..இங்கிலாந்து அணி 357 ரன்கள் குவிப்பு

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.
கொழும்பு,
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் இன்று கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் செய்தது.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் , ஹாரி புரூக் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஹாரி புரூக் 66 பந்துகளில் 136 ரன்களும், ஜோ ரூட் 111 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஜேக்கப் பெத்தேல் 65 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 358 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடுகிறது






