3-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து


3-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
x
தினத்தந்தி 28 Jan 2026 2:07 PM IST (Updated: 28 Jan 2026 2:50 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை அணி 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது.இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் நேற்று கொழும்புவில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் செய்தது.

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

1 More update

Next Story