மழைக்காலத்தில் என்ன மாதிரியான உடைகளை அணியலாம்...? எதை தவிர்க்கலாம்...?


மழைக்காலத்தில் என்ன மாதிரியான உடைகளை அணியலாம்...? எதை தவிர்க்கலாம்...?
x

மழை காலத்தில் ஆடைகள் முதல் காலணிகள் வரை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூரல் மழையோ, அடை மழையோ... அலுவலக பணி, வெளி இடங்கள், விழா சமயங்களில் மழையை காரணமாக காட்ட முடியாது. இந்த சூழலில் அழகான ஆடைகள் முதல் காலணிகள் வரை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள், பஸ், ரெயில் என நம்பியிருப்பவர்கள் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். அதனால் மழைக்காலத்தில் என்ன மாதிரியான உடைகளை அணியலாம், எதை தவிர்க்கலாம்? வசதியாகவும் ஸ்டைலாகவும் இருப்பது எப்படி? என்பதை தெரிந்துகொள்வோம்.

* மழைக்கால சட்டைகள்

மழைக்காலத்தில் வியர்வை மற்றும் தண்ணீர் காரணமாக ஆடைகளில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது. திடமான நிற ஆடைகளில் இது எளிதில் தெரியும். அதனால் எந்த டிசைனும் இல்லாத ஆடைகள் அணிய வேண்டாம். இது ஈரப்பதத்தையும், அழுக்கையும் காட்டும். அதனால் மழைக்காலத்தில் ஸ்டைலாகவும், அழகாகவும் தெரிய பூக்கள் அச்சிடப்பட்ட ஆடைகள் பயன்படுத்தலாம். சிறிய பூக்கள் டிசைன் கொண்ட ஆடைகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

* பேண்ட்

நீங்கள் பைக், ரெயில், பேருந்து போன்றவற்றை நம்பியிருந்தால் கண்டிப்பாக முழங்கால் நீள ஆடைகளை தவிர்க்க வேண்டும். பேண்ட் அணிய விரும்பினால் கிராப் செய்யப்பட்ட பேண்ட் போடலாம். இது வசதியான தோற்றத்தை கொடுக்கும். பெண்களுக்கு ஸ்கர்ட் நல்ல சாய்ஸாக இருக்கும். நிறங்கள் பிரகாசமானதாக இருக்கட்டும்.

* ஆடைகளின் தன்மை

பெண்கள் புடவை அணிந்தாலும் சல்வார், டாப்ஸ், ஸ்கர்ட் என எந்த ரகமாக இருந்தாலும் சரி அவை கனமான துணிகளாக இருக்கக்கூடாது. இது உடலோடு ஒட்டி விடும். மேலும் ஆடை உலர்வதற்கு அதிக நேரம் பிடிக்கும். அதற்கு மாற்றாக, மெல்லிய துணிகளை தேர்ந்தெடுக்கலாம். லினன், மல்மல், காட்டன் மற்றும் ஆர்கன்சா போன்ற துணிகள் மழைக்கு ஏற்றவை. அவை உடம்பில் ஒட்டாமல் நாள் முழுவதும் சவுகரியமாக வைத்திருக்கும்.

* காலணிகள்

மழை நேரங்களில் ஷூக்கள் அணியாமல் இருப்பதே நல்லது. செருப்புதான் சிறந்த தேர்வு. ஏனென்றால் ஷூ மற்றும் ஸ்னீக்கர்ஸ் போன்றவை தண்ணீரில் நனைந்து விடும். ஆனால் செருப்பு நனைந்தாலும் விரைவில் காய்ந்து விடும். இதனால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். அதேபோன்று துணியால் ஆன காலணிகளை தவிர்க்கவும். இது தண்ணீரை உறிஞ்சி விடும் என்பதால் உலர்வதற்கு அதிக நேரம் எடுக்கும்.

மழைக்காலத்தில் அலுவலகத்தில் காலணிகள் அணிய வேண்டிய கட்டாயம் இருந்தால் அதனுடன் பிளாஸ்டிக் கவர்களை அணிவதன் மூலம் கால்களை பாதுகாக்கலாம்.

* பேஷன் ஹேண்ட் பேக்

பேஷனும், ஸ்டைலும் முக்கியம் என்றாலும் உங்கள் போன், சார்ஜர் போன்றவையும் அவசியம். அதனால் மழைக்காலங்களில் உங்கள் ஆடைகளை பாதுகாக்க வாட்டர் புரூப் பேக் வாங்கலாம். பெண்கள் வாட்டர் புரூப் ஹேண்ட் பேக்குகளை பயன்படுத்தலாம். கனமான லெதர் பேக், வெல்வெட் கொண்டு தயாரிக்கப்பட்டவை, துணியால் உருவாக்கப்பட்டவை, கற்கள் பதித்த ஹேண்ட் பேக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றை பயன்படுத்தும்போது அவை ஆடையில் ஈரப்பதத்தை படர செய்துவிடலாம்.

1 More update

Next Story