போட்டி நிறைந்த உலகில் சாதிக்கும் வழிமுறைகள் என்னென்ன...?


போட்டி நிறைந்த உலகில் சாதிக்கும் வழிமுறைகள் என்னென்ன...?
x

நாம் மாற்றத்திற்கான விளிம்பில் இருக்கிறோம்.

மனிதர்களுக்கு மனிதர்களே என்றும் போட்டி என்கிற நிலை இப்போது இல்லை. ஏ.ஐ. தொழில்நுட்பமும் மனிதர்களின் வேலையை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. இதனால் நாம் மாற்றத்திற்கான விளிம்பில் இருக்கிறோம். இதற்கு ஏற்றவாறு நமது திறன்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், பல இடங்களில் மறுக்கப்படுவோம் என்பதே நிதர்சனம். இந்த நிலையில், இந்த போட்டி நிறைந்த உலகில், எப்படி வெற்றி பெறுவது என்பதை இங்கு பார்ப்போம்.

திறன் அறிதல்

உங்களுக்கு இயற்கையாக இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களை தினமும் எழுந்து கொள்ள தூண்டுவது எது?, உங்களை தூங்கவிடாமல் செய்யும் கனவு எது? என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிறரை விட உங்களால் இதில் முன்னிலையில் இருக்க முடியும் என்பதை வைத்துதான் உங்களது தகுதியையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

தொலைநோக்கு பார்வை

உங்களின் கனவு, நெடுங்காலத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதற்குரிய நீண்ட கால திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை கற்றுக்கொள்ள உங்கள் நேரத்தையும் வருடங்களையும் செலவிட வேண்டும். உங்கள் வேலைக்கான மரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள். டிரெண்டிங்கில் என்ன இருக்கிறதோ, அதை பின் தொடராமல், நீண்ட காலத்திற்கான உங்கள் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

தொடர் கற்றல்

உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கும், மனிதர்களும் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எனவே, 3 வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு உபயோகப்பட்ட ஒரு திறமை இப்போது பயன்தராமல் போகலாம். எனவே, எப்போதும் ஏதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்பவராக இருங்கள். வாசிப்பு பழக்கத்தை வளர்த்து, நிறைய கேள்வி கேளுங்கள். சூழலுக்கு தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நிதி, உறவுகள், தொழில்நுட்பம் என எல்லையற்று கற்றுக்கொண்டே இருங்கள்.

நெட்வொர்க்கிங்

நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த துறையில் தொடர்புகளை (நெட்வொர்க்கிங்) வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை தூக்கிவிடும் நல்வார்த்தை பேசுபவர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் பிறருக்கு உதவி செய்யுங்கள், பிறரையும் உங்களுக்கு உதவி செய்ய வையுங்கள்.

வெற்றி

வெற்றிக்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக அர்த்தம் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது வெற்றியாக இருக்கும், ஒரு சிலருக்கு தனக்கு சுதந்திரம் கிடைப்பது சுதந்திரமாக இருக்கும். சிலருக்கு மன அமைதி, சிலருக்கு தன்னை பிறர் அறிந்து கொள்வது இப்படி வெற்றி என்பது உங்கள் அகராதியில் என்ன என்பதை தெரிந்து வைத்து அதற்கு ஏற்றவாறு உழைப்பை போடுங்கள்.

1 More update

Next Story