குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுகள் என்னென்ன..?


குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுகள் என்னென்ன..?
x

காலை உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகள் காலை வேளைகளில் சத்தான உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கிறார்கள். காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. காலை உணவு ஏன் அவசியம். அவர்களுக்கு வேண்டிய சத்துக்கள் என்னென்ன, எப்படி கொடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, காலை உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், கல்விக்கும் முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பது அவர்களது உடல் மற்றும் மன நலத்தை பாதிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட பழக்குவது, வாழ்க்கை முழுவதும் உடல் மற்றும் மன வெற்றிக்கு வழிவகுக்கும் என்று சொல்லலாம். இது குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

காலை உணவின் அவசியம்

காலை உணவு உட்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, காலை உணவு பசியைக் குறைத்து, கற்றலுக்கு வழிவகுக்கிறது. இதனால் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பதோடு கல்வியிலும் கவனம் செலுத்த முடியும். குழந்தைகள் போதுமான நினைவாற்றலை பெறவும், சுறுசுறுப்புடன் செயல்படவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியம்.

தவிர்க்கக்கூடாது

சில குழந்தைகள், வீட்டுப் பாடம், விளையாட்டு என இரவு தூங்க செல்லத் தாமதமாவதால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாமல் பள்ளிக்கு அவசரமாகக் கிளம்பிச் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்குச் சாப்பிட நேரம் கிடைப்பதில்லை. போதுமான தூக்கம் இல்லாததால், சில குழந்தைகள் காலையில் சோர்வாக உணர்கிறார்கள். அதனால் அவர்களால் சாப்பிட முடிவதில்லை.

என்ன ஆகும்..?

காலை உணவை தவிர்ப்பதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் போகலாம். சத்தான காலை உணவு சாப்பிடாத குழந்தைகள் வகுப்பறையில் சுறுசுறுப் பில்லாமல், சோம்பேறியாக இருப்பார்கள். கவனச்சிதறல் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும். சில நேரங்களில் நடத்தை பிரச்சினைகளும் வரலாம். அதேபோன்று நல்ல காலை உணவை சாப்பிடும் குழந்தைகள் சிறந்த முறையில் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் மற்றும் நினைவாற்றலுடன் இருப்பார்கள்.

சத்துக்கள்

முட்டை, தயிர், வேர்க்கடலை, வெண்ணெய், சுண்டல் போன்ற புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும். முழு தானியங்கள், ஓட்ஸ், காய்கறிகள் போன்ற நார்ச்சத்துக்களையும் சேர்க்க வேண்டும். பீன்ஸ், பயறு வகைகள், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், மாதுளை, கொய்யா, சிட்ரஸ் பழங்கள், கீரைகள், மசாலா போன்றவற்றையும் சேர்க்க வேண்டும்.

பழ ஸ்மூத்தி

சில குழந்தைகளுக்கு சூடான அல்லது குளிர்ந்த தானிய உணவுகள் பிடிக்காது. அதேபோல பழங்கள், பழச்சாறுகள் அதிகம் பிடிக்கும். அவர்களுக்கு பழ ஸ்மூத்தி கொடுக்கலாம். குறிப்பிட்ட சில பழ ஸ்மூத்தியில் தயிர் சேர்த்து பருக வைக்கலாம். இது குழந்தைகளுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

1 More update

Next Story