இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி; படிப்புகள் தொடர்பான விரிவான விவரங்கள்


இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி; படிப்புகள் தொடர்பான விரிவான விவரங்கள்
x
தினத்தந்தி 3 Nov 2025 11:46 AM IST (Updated: 3 Nov 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

இந்தத்துறையில் சிறந்த கல்வியை வழங்கி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas) சார்பில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் “இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி” (Indian Institute of Petroleum and Energy) என்பதாகும். இந்த கல்வி நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகங்களான Hindustan Petroleum Corporation Limited (HPCL), (Indian Oil Corporation Limited) (IOCL), Oil and Natural Gas Corporation Limited (ONGC), Oil India Limited and Gas Authority Of India Ltd., (OIL & GAIL) போன்ற நிறுவனங்களோடு இணைந்து இந்தக் கல்வி நிறுவனம் செயல்படுவதால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த (Institution of National Importance) நிறுவனமாக இது கருதப்படுகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள முக்கிய எரிசக்தி நிறுவனங்களான – Shale Gas, Coal Bed Methane, Gas Hydrates, Conventional Energy Sources, Renewable Energy Sources போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் திறன்வாய்ந்த மனிதவளத்தை பெருக்குவதை இந்த நிறுவனம் முக்கியக் குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறது. இந்தத்துறையில் சிறந்த கல்வியை வழங்கி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு படிப்புகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள்

இங்கு நடத்தப்படும் பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகள் பற்றிய விவரங்கள் வருமாறு:

பட்டப்படிப்புகள்

1.பி.டெக். பெட்ரோலியம் என்ஜினீயரிங் (B.Tech in Petroleum Engineering)

2.பி.டெக். கெமிக்கல் என்ஜினீயரிங் (Chemical Engineering)

3.பி.டெக். மெக்கனிக்கல் என்ஜினீயரிங் (Mechanical Engineering)

4.பி.டெக். மேத்தமெட்டிக்ஸ் அன்ட் கம்பியூட்டிங் (Mathematics and Computing)

மேலே குறிப்பிட்டுள்ள 4 பாடப்பிரிவுகளும் 4 ஆண்டுகள் படிப்பாகும். பி.டெக். பெட்ரோலியம் என்ஜினீயரிங் படிப்பில் 50 மாணவ - மாணவிகளும், பி.டெக். கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 50 மாணவ, மாணவிகளும், பி.டெக். மெக்கனிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 40 மாணவ, மாணவிகளும், பி.டெக். மேத்தமெட்டிக்ஸ் அன்ட் கம்பியூட்டிங் படிப்பில் 22 மாணவ, மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தப்படிப்புகளில் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மேலும், பிளஸ் 2 தேர்வில் மொத்தமுள்ள 5 பாடங்களில் சராசரியாக 15 சதவிகித மதிப்பெண்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், முதல்முறையாக தேர்வு எழுதி (First Attempt)> பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இவைதவிர, ஜாயிண்ட் என்டரன்ஸ் எக்ஸாம் (அட்வான்ஸ்டு) (Joint Entrance Exam Advanced) (JEE Advanced) தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதர பிறப்டுத்தப்பட்ட இனத்தைச் தேர்ந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கும் மத்திய அரசின் வழிகாட்டலின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பட்ட மேற்படிப்புகள்

1.எம்.எஸ்.சி. அப்ளைடு ஜியாலஜி (M.Sc., Applied Geology)

எம்.எஸ்சி. அப்ளைடு ஜியாலஜி படிப்பு நிலவியலின் அடிப்படை கோட்பாடுகளைப்பற்றி (Geological Principles), சுரங்கங்கள் (Mining)> ஆழ்கடல் பகுதிகளில் பெட்ரோலியம் ஆய்வு (Petroleum Explorations), சுற்றுச்சூழல் பற்றிய ஆலோசனைகள் வழங்குதல் (Environmental Consulting), நில தொழில்நுட்பப் பொறியியல் (Geo Technical Engineering) போன்ற துறைகளில் போதிய அறிவைப் பெறவும், அந்தத் துறைகளுக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் முறையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தப்படிப்பை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆய்வகத்தில் பரிசோதனைகள் செய்வது, ஆராய்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பது களப்பணிகள் செய்வது (Field Work) போன்ற அனுபவங்கள் ஏற்படும் விதத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பு 2 வருடப் படிப்பாகும். இந்தப் படிப்பைப் படிப்பவர்களுக்கு Mineral Exploration, Sub-surface Modelling, Fossil Fuel and Ground Water Exploration, Drilling, Estimation of Resources மற்றும் Site Investigation ஆகிய துறைகளில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

2.எம்.டெக். பெட்ரோலியம் என்ஜினீயரிங் (M.Tech. Petroleum Engineering)

எம்.டெக். பெட்ரோலியம் என்ஜினீயரிங் படிப்பில் மொத்தம் 20 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இது 2 வருடப் படிப்பாகும். இந்தப்படிப்பில், Petroleum Geology, Applied Reservoir Engineering, Applied Hydrocarbon Production Engineering, Drilling Technology, Formation Evaluation and Applied Reservoir Simulation ஆகிய முக்கியப் பாடங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், Carbon Capture Storage and Utilization, Flow Assurance, Data Science, Big Data Management, Artificial Intelligence and Machine learning, HPHT Drilling and Completion Fluid, Alternate Energy Resources, Hydrogen Energy, Environmental Engineering, Applied Gas Engineering, Applied Well stimulations techniques மற்றும் Applied Numerical Modelling போன்ற விருப்பப் பாடங்களும் இந்தப் படிப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

3. வெப் பேஸ்டு எம்.டெக். இன் டேட்டா சயின்ஸ் அன்ட் மிஷின் லேர்னிங் (WEB BASED M.TECH. IN DATA SCIENCE AND MACHINE LEARNING)

இந்தப்படிப்பு பெட்ரோலிய துறையில் பணிபுரிபவர்களுக்காக உருவாக்கப்பட்ட படிப்பாகும். இதனை மாலை நேர படிப்பாகவும், வார இறுதி படிப்பாகவும் ஆன்லைன்மூலம் நடத்துகிறார்கள். இந்தப்படிப்பில் மொத்தம் 45 கிரெடிட்டுகள் (Credits) வழங்கப்படும். 27 கிரெடிட்டுகள் பாடத்திற்கும், 18 கிரெடிட்டுகள் புராஜக்ட் வொர்க்குக்கும் வழங்கப்படுகிறது. 2 செமஸ்டர்கள் முடிவடைந்ததும் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். 2 செமஸ்டர்கள் முடிவடைந்ததும், அதாவது பாடங்களில் தேர்ச்சி பெற்றதும் பி.ஜி.டிப்ளமோ என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், முழுவதுமாக 45 கிரெடிட்டுகள் பெற்றபின்புதான், எம்.டெக். பட்டம் வழங்கப்படும்.

ஆராய்ச்சி படிப்புகள்

இந்த நிறுவனத்தில் கீழ்க்கண்ட துறைகளில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவை,

* BIOSCIENCE

* ELECTRICAL ENGINEERING

* CHEMICAL ENGINEERING

* PETROLEUM ENGINEERING

* MECHANICAL ENGINEERING

* CHEMISTRY

* COMPUTER SCIENCE AND ENGINEERING

* EARTH SCIENCES

* MATHEMATICS - ஆகியவை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சி படிப்புகள் பெட்ரோலிய துறையில் வளர்ந்துவரும் துறைகளான–SHALE GAS, COAL BED METHANE, GAS HYDRATES, CONVENTIONAL ENERGY SOURCES, RENEWABLE ENERGY SOURCES, UNDERGROUND CO2 STORAGE AND UTILIZATION, DATA SCIENCE IN PETROLEUM INDUSTRY ஆகிய துறைகளில் அதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் விதத்தில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், இங்கு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் படிப்பை முடித்தபின்பு விஞ்ஞானிகளாகவும், கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் பெட்ரோலிய துறைசார்ந்த நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளாகவும் பணியாற்ற நல்ல வாய்ப்புகள் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு…

தற்காலிக முகவரி:

INDIAN INSTITUTE OF PETROLEUM AND ENERGY,

AU Engineering College,

2nd Floor,

Main Block,

Amar Nagar,

Visakhapatnam - 530003,

Andhra Pradesh.

நிரந்தர முகவரி:

INDIAN INSTITUTE OF PETROLEUM AND ENERGY,

Vangali Village,

Sabbavaram Mandal,

Visakhapatnam,

Andhra Pradesh.

Email: office@iipe.ac.in

Website: www.iipe.ac.இந்த

1 More update

Next Story