கரோலினுடன் பயணம்; குலுங்கிய விமானம்... டிரம்ப்பின் ஜோக்கால் நிருபர்கள் அதிர்ச்சி


கரோலினுடன் பயணம்; குலுங்கிய விமானம்... டிரம்ப்பின்  ஜோக்கால் நிருபர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 Jan 2026 10:35 AM IST (Updated: 13 Jan 2026 12:05 PM IST)
t-max-icont-min-icon

டிரம்புக்கு பின்னால் நின்று அதனை கேட்டு கொண்டே இருந்த லீவிட் சிரித்து விட்டார்.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மார்-அ-லாகோவில் இருந்து வாஷிங்டன் நோக்கி ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பினார். அவருடன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டும் விமானத்தில் பயணித்து உள்ளார்.

இதன்பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, பயணத்தின்போது நடுவானில் விமானம் திடீரென குலுங்கியது. இதனால் நான் பதற்றமடைந்தேன். பிடித்து கொள்ள வசதியாக ஏதும் இருக்கிறதா? என தேடி பார்த்தேன். ஆனால், அப்படி பிடித்து கொள்ள முற்றிலும் எதுவுமே இல்லாத ஓரிடத்தில் என்னை வைத்து விட்டீர்கள் என நான் நினைத்தேன்.

ஆனாலும், எதனையாவது பிடித்து கொள்ளலாம் என நான் மீண்டும் தேடி பார்த்தேன். ஆனால், நிச்சயம் அது கரோலின் அல்ல என கூறினார். அவர் இதனை கூறும்போது டிரம்புக்கு பின்னால் நின்று அதனை கேட்டு கொண்டே இருந்த லீவிட் சிரித்து விட்டார். டிரம்ப் இப்படி கூறி விட்டு, பின்னால் திரும்பி லீவிட்டை பார்த்தார்.

இதனை கேட்டதும் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவரை வேடிக்கையான மனிதர் என ஒருவரும், டிரம்ப் செல்லும் அறையில் எல்லாம் விளக்கை ஏற்றி ஒளியேற்படுத்துவார். அவர் எப்போதும் நகைச்சுவையான ஜனாதிபதி என மற்றொருவரும் தெரிவித்தனர்.

1 More update

Next Story