உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 3 பேர் பலி


உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jan 2026 10:57 AM IST (Updated: 9 Jan 2026 4:03 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 415வது நாளாக போர் நீடித்து வருகிறது

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 415வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

1 More update

Next Story