போர் வெடித்தால்...பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை


போர் வெடித்தால்...பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை
x

எங்கள் மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவிதிகளில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.

காபூல்,

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தர்ஸ புல்லில் நடந்து வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் அரசாங்கம் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் மந்திரி நூருல்லா நூரி கூறியதாவது:-

ஆப்கானியர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். போர் வெடித்தால் ஆப்கானிஸ்தானின் மூத்த குடிமக்களும் இளைஞர்களும் போராடத் தயாராக இருப்பார்கள். பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தனது நாட்டின் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம். ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள் தோல்வியில் முடிந்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவிதிகளில் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

1 More update

Next Story