கிராமத்திற்குள் புகுந்து ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு - 31 பேர் பலி

துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜர். இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டின் டிலபெரி மாகாணத்தில் கொரொல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்த ஆயுத கும்பல் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய ஆயுத கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






