பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியா வருகை

டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் பங்கேற்க உள்ளார்.
பாரிஸ்,
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாடு பிப்ரவரி 19-20 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜீன்-நோயல் பரோட்டை சந்தித்து பேசியபோது, பிரான்ஸ் அதிபரை வரவேற்க இந்தியா அவலுடன் காத்திருப்பதாக தெரிவித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






