இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு

இலங்கைக்கு 45 கோடி டாலர் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'டிட்வா' புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புயல் பாதித்தபோது, 'ஆபரேஷன் சாகர்பந்து' மூலம் இந்தியா இலங்கைக்கு உடனடியாக நிவாரண உதவிகளை மேற்கொண்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, இலங்கைக்கு 45 கோடி டாலர் நிதியுதவித் தொகுப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. இதில் 35 கோடி டாலர் சலுகை கடன் அடிப்படையிலும், 10 கோடி டாலர் மானியமாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையே முக்கியப் போக்குவரத்து இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினர் உதவியுடன் 100 அடி நீளம் கொண்ட முதல் பெய்லி பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா. இலங்கை போக்குவரத்துத்துறை இணை மந்திரி பிரசன்ன குணசேனா மற்றும் கல்வித்துறை இணை மந்திரி மதுரா செனவிரத்னே ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்தப் பாலம், பயணிகள் நடமாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் மற்றும் பிராந்தியத்தில் பிர உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அத்தியாவசிய போக்கு வரத்துக்கும் மிகவும் உதவி கரமாக இருக்கும்.
மொத்தம் சுமார் 228 டன் எடையுள்ள 4 பெய்லி பாலங்கள், சி-17 குளோப் மாஸ்டர் என்ற 4 விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 48 இந்திய ராணுவ வீரர்களைக் கொண்ட பொறியியல் பணிக்குழுவும் இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்டி-ராகலா சாலையில் மற்றொரு பெய்லி பாலம் விரைவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை வரும் 15-க்கும் மீட்டெடுக்க வாரங்களில் மேற்பட்ட கூடுதல் பெய்லி பாலங்கள் கட்ட திட்டமிடப் பட்டுள்ளன.






