60 ஆயிரம் டன் உயர்தர அமெரிக்க கோதுமை வங்காளதேசம் சென்றடைந்தது


60 ஆயிரம் டன் உயர்தர அமெரிக்க கோதுமை வங்காளதேசம் சென்றடைந்தது
x

அமெரிக்காவின் 1.73 லட்சம் டன் அளவிலான மென்மையான வெள்ளை கோதுமையும் வங்காளதேசம் சென்றடைந்து உள்ளது.

டாக்கா,

அமெரிக்க வேளாண் துறை, அமெரிக்க கோதுமை கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கடந்த ஆண்டு ஜூலையில் வங்காளதேச அரசு புரிந்துணர்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி, 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் டன் அமெரிக்க கோதுமையை கொள்முதல் செய்வது என முடிவாகி உள்ளது.

இதனால், அமெரிக்க வேளாண் பொருட்களின் ஏற்றுமதிக்கான சந்தை வளர்ச்சியில் வங்காளதேசம் முக்கிய பங்காற்றுகிறது.

இதன்படி, அமெரிக்காவின் 60 ஆயிரம் டன் உயர்தர சிவப்பு கோதுமை வங்காளதேசம் சென்றடைந்தது. இதேபோன்று அமெரிக்காவின் வாஷிங்டன், ஆரேகான் மற்றும் இதஹோ மாகாணங்களின் உற்பத்தியான 1.73 லட்சம் டன் அளவிலான மென்மையான வெள்ளை கோதுமையும் சென்றடைந்து உள்ளது.

இதனை வங்காளதேசத்திற்கான அமெரிக்க தூதர் பிரென்ட் கிறிஸ்டென்சன் மற்றும் சத்தோகிராம் துறைமுக கழக தலைவர் மொனிருஜ்ஜாமன், உணவு பாதுகாப்பு செயலாளர் முகமது பிரோஸ் சார்கர் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுவதுடன், இருதரப்பு உறவும் வலுப்பட்டு வருகிறது.

இதேபோன்று வங்காளதேசத்திற்கு அமெரிக்காவின் சோயா பீன்ஸ் ஏற்றுமதியும் மும்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

1 More update

Next Story