இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Dec 2025 10:18 AM IST
ஈரோட்டில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த ஒரு இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீசார்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- 18 Dec 2025 10:08 AM IST
ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம்: கோவை வந்தடைந்தார் விஜய்
கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் காலை 10 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார்.
- 18 Dec 2025 9:58 AM IST
நாடாளுமன்றத்தில் சிகரெட் புகைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. - வைரல் வீடியோ
அனுராக்சிங் தாக்கூர் குற்றம்சாட்டியது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கீர்த்தி ஆசாத் என்று தெரியவந்தது.
- 18 Dec 2025 9:56 AM IST
பும்ராவின் சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி
ஜஸ்பிரித் பும்ரா 783 புள்ளிகள் எடுத்ததே இந்திய பவுலரின் அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது.
- 18 Dec 2025 9:55 AM IST
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம்
'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 18 Dec 2025 9:53 AM IST
உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராஜ் ஜோடி அசத்தல் வெற்றி
சாத்விக்-சிராஜ் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை சந்தித்தது.
- 18 Dec 2025 9:45 AM IST
மீண்டும் சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. கட்டுக்கடங்காமல் உயரும் வெள்ளி விலை..!
தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 18 Dec 2025 9:20 AM IST
விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் காலையிலேயே குவிந்த தொண்டர்கள்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் காலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- 18 Dec 2025 9:16 AM IST
ஏ.ஐ. அடிப்படையில் சுங்க கட்டணம் வசூல்: நிதின் கட்காரி
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
- 18 Dec 2025 9:13 AM IST
மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.04 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.





















