இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Dec 2025 6:51 PM IST
‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடல் ‘ஒரு பேரே வரலாறு’ வெளியானது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் ’ஒரு பேரே வரலாறு’ வெளியானது.
- 18 Dec 2025 6:38 PM IST
“திருமணம் ஆகலையா 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லுங்க” - பாஜக எம்.பி பேச்சால் எழுந்த சர்ச்சை
பெண்ணிற்குத் திருமணம் ஆகவில்லை என்றாலோ, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை இல்லை என்றாலோ அல்லது பசு மாடு பால் தரவில்லை என்றாலோ... 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும். உத்தராகண்ட் பாஜக எம்.பி அஜய் பட் பேச்சால் எழுந்த சர்ச்சை எழுந்துள்ளது. அறிவியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கும், சமூகச் சிக்கல்களுக்கும் இதுபோன்ற தீர்வுகளைக் கூறுவது சரியல்ல” என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
- 18 Dec 2025 4:47 PM IST
அண்ணாமலை கைது
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்ன காளிபாளையம் பகுதியில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடந்துவந்த நிலையில், இன்று அண்ணாமலை பங்கேற்றார்.
- 18 Dec 2025 4:43 PM IST
டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி வேலுமணி சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள், சி.வி.சண்முகம், தனபால் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
- 18 Dec 2025 4:40 PM IST
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை அகற்றுங்கள் - டி.கே.சிவக்குமார் கருத்து
உங்களுக்கு தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை அகற்றுங்கள். உங்களால் காந்தியின் படத்தை அகற்ற முடியாது என 100 நாள் வேலைதிட்ட மசோதா பெயர் மாற்றம் குறித்து டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
- 18 Dec 2025 4:30 PM IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறுவது 4வது நாளான இன்று மந்தமான நிலையில் உள்ளது முதல் நாளில் 1300 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 2ம் நாள் 64 பேரும், மூன்றாம் நாளான நேற்று 300க்கும் குறைவான விருப்ப மனுக்களுமே அளிக்கப்பட்டிருந்தது. இன்றும் அதே போல, விருப்ப மனு அளிப்பது மந்தமாகவே உள்ளது.
- 18 Dec 2025 4:28 PM IST
இலங்கையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் உள்பட அந்நாட்டின் தமிழ் அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். விசிக தலைவர் திருமாவளவனும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.
- 18 Dec 2025 4:26 PM IST
"கணினி நிபுணர் பழனிசாமி"- உதயநிதி விமர்சனம்
லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை என கணினி நிபுணர் பழனிசாமி கதை விடுகிறார். பாசிச பாஜகவின் எண்ணத்தை அவர்களின் வழிகாட்டுதலில் பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.அரசு லேப்டாப் கொடுப்பதை பழனிசாமி அல்ல, அவரது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 18 Dec 2025 3:38 PM IST
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்துவைத்தது மதுரை ஐகோர்ட்டு.





















