இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
தினத்தந்தி 16 Dec 2025 8:45 AM IST (Updated: 16 Dec 2025 7:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • சிட்னி தாக்குதல்: துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றி வெளியான திடுக் தகவல்
    16 Dec 2025 6:48 PM IST

    சிட்னி தாக்குதல்: துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றி வெளியான திடுக் தகவல்

    சிட்னி,

    *ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சாஜித் அக்ரம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என இந்திய அதிகாரிகள் தரப்பில் தகவல்

    *25 ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தை விட்டு வெளியேறிய சாஜித் அக்ரம் ஆஸ்திரேலியாவில் குடியேறி அங்கேயே திருமணம் செய்துகொண்டதாகவும் மொத்தமே 2-3 முறைதான் இந்தியாவிற்கு வந்து சென்றதாகவும் தகவல்

    * 50 வயதான சாஜித் அக்ரம், அவரது 24 வயதான மகன் நவீத் அக்ரம் உடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    * சம்பவ இடத்தில் சாஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார்.

  • 16 Dec 2025 5:09 PM IST

    தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

    திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை; தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • வங்கதேசத்தவர்கள் 24 பேர் நாடு கடத்தல்
    16 Dec 2025 4:33 PM IST

    வங்கதேசத்தவர்கள் 24 பேர் நாடு கடத்தல்

    சட்ட விரோதமாக நுழைந்து தமிழ்நாட்டில் தங்கியிருந்து கைதாகி, சேலம் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 24 பேர் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 குழந்தைகள் உள்பட 24 பேரும், மேற்கு வங்கத்திற்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

  • 16 Dec 2025 1:56 PM IST

    எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை - தமிழக அரசு

    11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

  • 16 Dec 2025 1:48 PM IST

    பிபிசி செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்


    2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்டதாக கூறி பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக ஏற்கனவே டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டு பிபிசி நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 16 Dec 2025 1:44 PM IST

    ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்கிரஸ் கேள்வி 


    காங்கிரசின் கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறுகையில், “ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே 'தேச விரோதிகள்' என முத்திரை குத்திவிடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார். 

1 More update

Next Story