இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Jan 2026 11:14 AM IST
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இத்தனை தொகுதிகளா? வெளியான பரபரப்பு தகவல்
கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
- 7 Jan 2026 10:53 AM IST
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்..? - சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விரைவில் மேலும் சில கட்சிகள் சேருவார்கள். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- 7 Jan 2026 10:51 AM IST
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது ஏன்?: அன்புமணி பரபரப்பு பேட்டி
எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்துள்ளோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.
- 7 Jan 2026 10:50 AM IST
கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்
கே.எஸ்.ஆர்.டி.சிக்காக மோகன்லால் ஊதியம் பெறாமல் இலவசமாக சேவை செய்ய முன்வந்துள்ளார்.
- 7 Jan 2026 10:48 AM IST
எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்?
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
- 7 Jan 2026 10:47 AM IST
மீண்டும் வருகிறது ஐஎஸ்எல் கால்பந்து தொடர்!
இந்த சீசனுக்கான (2025-26) ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டியது.
- 7 Jan 2026 10:46 AM IST
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை மிட்செல் சான்ட்னர் கேப்டனாக வழிநடத்துவார்.
- 7 Jan 2026 10:27 AM IST
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக மோகன்லால் ஊதியம் பெறாமல் இலவசமாக சேவை செய்ய முன்வந்துள்ளார் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தைப் புதுப்பிக்கவும், பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க இம்முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 7 Jan 2026 10:17 AM IST
திமுகவுக்கு வரவுள்ள தேர்தலில் பொங்கல் வைக்க வேண்டும் - ஹெச்.ராஜா
திமுகவுக்கு வரவுள்ள தேர்தலில் பொங்கல் வைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சிக்கு வந்தோம் என்பது மட்டும் பத்தாது. திமுகவை ஒத்த சீட்டு கூட ஜெயிக்க விடாமல் செய்ய வேண்டும். முருகனுக்கு எதிராக தீபம் ஏற்ற தடை செய்த ஒவ்வொருத்தரும் தண்டிக்கப்பட வேண்டும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
- 7 Jan 2026 10:15 AM IST
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழே குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 99.84 அடியாகவும், நீர் இருப்பு 64.634 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 208 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 8400 கன அடியாகவும் உள்ளது.


















