இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Jan 2026 12:19 PM IST
தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி
தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும், திமுக அரசின் இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்தார்.
- 7 Jan 2026 12:18 PM IST
20 ஓவர் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐசிசி
வங்காளதேச அணியின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 7 Jan 2026 12:16 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
- 7 Jan 2026 11:58 AM IST
திண்டுக்கல்: 61 பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல்லில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் 61 பஸ்களின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி 38 நகர்ப்புற பகுதி பஸ்கள், 23 புறநகர் பஸ்கள்ன் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 7 Jan 2026 11:49 AM IST
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனையில் ஈடுபட்டார்.
திருச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த நிலையில் நேற்று (ஜன.6) எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 7 Jan 2026 11:43 AM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கு: மார்ச் 9ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில் மார்ச் 9ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மார்ச் 9இல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 7 Jan 2026 11:38 AM IST
பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு.. 12-ந் தேதி புறப்படும் திருவாபரண ஊர்வலம்
மகர விளக்கு பூஜை அன்று சாமி அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
- 7 Jan 2026 11:21 AM IST
விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார்: காங்.நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி
விஜய்யை சந்தித்தது உண்மைதான். அதற்கு மேல் எதையும் சொல்ல மாட்டேன் என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
- 7 Jan 2026 11:20 AM IST
ஆன்லைனில் விவசாயியிடம் ரூ.42 லட்சம் மோசடி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.
- 7 Jan 2026 11:18 AM IST
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி தொடர்ந்த வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.


















