இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
x
தினத்தந்தி 1 Dec 2025 9:28 AM IST (Updated: 1 Dec 2025 3:47 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 Dec 2025 9:45 AM IST

    அரையாண்டு தேர்வு வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்- பள்ளிக்கல்வித்துறை

    அரையாண்டு தேர்வு வருகிற 10-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை எதிர்கொள்ள மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். தேர்வுக்காக வினாத்தாள் தயாரிக்கும் பணியிலும் பள்ளிக்கல்வித்துறை மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது. அந்தவகையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) தளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வகுப்பு, பாடம், பயிற்றுவழி வாரியாக பிரித்து, உறையிடப்பட்ட கவரில் வைத்து தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் அதனை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் தினத்தன்று வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.

  • 1 Dec 2025 9:44 AM IST

    ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு

    ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "காணவில்லை.. ராகா ரங்கராஜ்- வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜுவை கடந்த 1 மாதமாக காணவில்லை டிஎன்ஏ டெஸ்ட்-க்கு தலைமறைவாக உள்ளார். இவரை இவண்டில் (event) பார்த்தால் உடனே எனக்கு மெசேஜ் (டிஎம்) செய்யவும்.

    என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்..." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • 1 Dec 2025 9:41 AM IST

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு

    பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.

  • 1 Dec 2025 9:38 AM IST

    புதிய சொத்துகள் சேரும்... இன்றைய ராசிபலன் - 01.12.2025

    சிம்மம்

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம். புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

  • 1 Dec 2025 9:35 AM IST

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    டிட்வா புயல் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story