இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Jan 2026 9:51 AM IST
இன்று (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.
- 25 Jan 2026 9:50 AM IST
இன்றைய ராசிபலன் (25.01.2026): உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும் நாள்..!
கன்னி
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்











