இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Jan 2026 10:57 AM IST
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Jan 2026 10:48 AM IST
16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Jan 2026 10:45 AM IST
மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன் பதிவு
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 25 Jan 2026 10:40 AM IST
தேசிய வாக்காளர் தினம்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 25 Jan 2026 10:39 AM IST
கால்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
சேலத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
- 25 Jan 2026 10:34 AM IST
வாக்கு திருட்டு; தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
பா.ஜனதா தோல்வியடையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
- 25 Jan 2026 10:10 AM IST
ஆபாச வீடியோ வழக்கு; சத்தீஷ்கார் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் விடுவிப்பு ரத்து
பூபேஷ் பாகல் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- 25 Jan 2026 10:09 AM IST
பட்ஜெட் கூட்டத்தொடர்: நாளை மறுநாள் நடைபெறுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்
இந்த கூட்டத்தில், கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- 25 Jan 2026 10:08 AM IST
கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கல்:ரூ.20 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
முதல் பரிசு வென்ற டிக்கெட்டை கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர் சுதீக் என்பவர் விற்றுள்ளார்.
- 25 Jan 2026 10:07 AM IST
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர மறுக்கும் ரஷியா
அபுதாபியில் ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.



















