இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Jan 2026 12:47 PM IST
தை அமாவாசை... முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்
தை அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் வருடம் முழுக்க முன்னோர்களுக்கு விரதம் இருந்து படையல் வைத்ததற்கு சமம் என்பது நம்பிக்கை.
- 18 Jan 2026 12:46 PM IST
"யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை" - விமர்சனங்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்
இந்தி திரைப்படத் துறையில் 'சமூகப் பாகுபாடு' தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விமர்சனங்களுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பதிலளித்துள்ளார். வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
- 18 Jan 2026 12:44 PM IST
ஓசூர் விமான நிலையம் - தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 18 Jan 2026 12:43 PM IST
தொடர் விடுமுறை... திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், தைப்பூசம் மற்றும் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் சுமார் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
- 18 Jan 2026 12:42 PM IST
அமெரிக்க வீரர்கள் படுகொலை... அல்-கொய்தா தொடர்புடைய தலைவரை தாக்கி அழித்த அமெரிக்கா
அமெரிக்க படைகள் கடந்த 16-ந்தேதி நடத்திய தாக்குதலில், பிலால் ஹசன் அல்-ஜசீம் கொல்லப்பட்டார்.
- 18 Jan 2026 12:41 PM IST
திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் - அன்புமணி
குற்றங்கள் குறித்த செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியில் வராமல் தடுப்பதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 18 Jan 2026 12:38 PM IST
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்
நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
- 18 Jan 2026 11:52 AM IST
கோவளம் நன்னீர்த் தேக்க திட்டத்தை கைவிடுக - சீமான்
இத்திட்டம் 16க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டம் என சீமான் தெரிவித்துள்ளார்.
- 18 Jan 2026 11:51 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை மட்டும் அனுமதி
மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.
- 18 Jan 2026 11:48 AM IST
’வெறுப்பு உங்கள் கண்களை மறைத்தது’ - ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து
ஏ.ஆர்.ரகுமானை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை சந்தித்ததில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.


















