இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Jan 2026 1:39 PM IST
உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு! - நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- 17 Jan 2026 1:37 PM IST
மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி கண்டது. இதில் பா.ஜ.க. மட்டும் 88 இடங்களை கைப்பற்றியது.
- 17 Jan 2026 1:19 PM IST
மொத்த கூட்டுறவு துறையின் அர்ப்பணிப்பு, இந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்றுச் சாதனை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
- 17 Jan 2026 12:30 PM IST
அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்; எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப். அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார்.
- 17 Jan 2026 12:27 PM IST
ரேஷன் பணியாளர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியமைக்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 17 Jan 2026 12:22 PM IST
அதிமுக தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
அதிமுக தேர்தல் அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முழு விவரம்:-


- 17 Jan 2026 12:04 PM IST
ஜல்லிகட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 17 Jan 2026 11:44 AM IST
மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை - அன்புமணி கண்டனம்
போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 17 Jan 2026 11:26 AM IST
இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- 17 Jan 2026 11:24 AM IST
எம்.ஜி.ஆர். பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் - விஜய்
மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

















