இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-01-2026


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-01-2026
x
தினத்தந்தி 12 Jan 2026 9:37 AM IST (Updated: 12 Jan 2026 3:34 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது
    12 Jan 2026 3:34 PM IST

    மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது

    மணப்பாறை: வளநாடு பகுதியில் மயில்களை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மயில்களை வேட்டையாடிய புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி, கார்த்தி, திருப்பதி, பரத்குமார், கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 5 பேரையும் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி, 4 செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

  • மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்
    12 Jan 2026 2:35 PM IST

    மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்

    பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தல், அதை எதிர்கொள்ள நாம் இரு நாடுகளும் உறுதியுடன் செயல்படுவோம் என பிரதமர் மோடியுடன் இணைந்து ஜெர்மன் அதிபர் மெர்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

  • வலுவடையும் இந்தியா, ஜெர்மன் உறவு
    12 Jan 2026 2:33 PM IST

    வலுவடையும் இந்தியா, ஜெர்மன் உறவு

    2 நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்திருந்த நிலையில், ஜெர்மனி, இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இது குறித்து பிரதமர் மோடி, இந்தியா-ஜெர்மன் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும்; ஜெர்மனியுடனான உறவை மேலும் வலுப்படுத்த உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு விசா இல்லாத பயண வசதியை ஜெர்மனி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி
    12 Jan 2026 2:32 PM IST

    விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி

    * கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?

    * நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?

    * கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?

    * கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?

    * தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’’

    என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 1.30 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பேருந்து பறிமுதல்:அமைச்சர் எச்சரிக்கை
    12 Jan 2026 1:31 PM IST

    பேருந்து பறிமுதல்:அமைச்சர் எச்சரிக்கை

    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் படுக்கை வசதி பேருந்துகளில் 4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டும் நிலையில், அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்றும், போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள் என்றும் சிவசங்கர் கூறினார்.

  • 12 Jan 2026 12:33 PM IST

     சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு

    புதுடெல்லி,

    ஜனநாயகன் திரைப்பட சான்றிதழ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் படதயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்த ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடானது செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பட்டியலிடப்படாத நிலையில் விரைவில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

  • 12 Jan 2026 10:45 AM IST

    சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக டெல்லி வந்தடைந்தார் விஜய்: சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர் ஆவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 More update

Next Story