திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

கோப்புப்படம்
நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதலில் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
போட்டியை கண்டுகளிப்பதற்காக ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஏராளமாக மக்கள் குவிந்துள்ளனர். போட்டி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






