ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கூறிவருவது புதிது அல்ல: கார்த்தி சிதம்பரம்


ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கூறிவருவது புதிது அல்ல: கார்த்தி சிதம்பரம்
x

பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் நான் பார்ப்பதாக இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. மாநில தேர்தல் மூலமாக சில நேரங்களில் மக்கள் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். அடிக்கடி தேர்தல் வந்தால்தான் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முடிகிறது. பராசக்தியோ, ஜனநாயகனோ 2 படங்களையும் நான் பார்ப்பதாக இல்லை.

திரைப்படத்தை வைத்து தமிழக அரசியலை நிர்ணயம் செய்யலாம் என நினைத்தால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு எப்போதோ தமிழக முதல்-அமைச்சராகி இருப்பார். ஒரு பொழுதுபோக்குக்காக படத்தை பார்ப்பார்கள். இதைவிட தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கூறி வருவது புதிதானது ஒன்றும் அல்ல. எல்லா அரசியல் கட்சிக்கும் உள்ள எதார்த்த எதிர்பார்ப்பு. எங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். கணிசமானவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் கட்சி உள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.

1 More update

Next Story