பொங்கல் பண்டிகை: 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

கோப்புப்படம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதியும், மாட்டுப் பொங்கல் 16-ந்தேதியும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14-ந்தேதி போகிப் பண்டிகை முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வருகிற 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






