நெல்லை, தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது


நெல்லை, தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: நூற்றுக்கணக்கானோர் கைது
x

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வலியுறுத்தி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

2021 தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் பணிக் கொடையாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 20 முதல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் மாவட்ட கலெகடர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடியில் இன்று சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்த செல்வம், அன்னம்மாள், வேல்முருகன், இணைச் செயலாளர்கள் பாஸ்கர், பிளாரன்ஸ் முத்துமணி, மோகனா, விஜயராணி, பொன்னரசி, செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பேரணியாக புறப்பட்டு பாளையங்கோட்டை ரோடு அம்பேத்கர் சிலை அருகில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி நூற்றுக்கணக்கானோர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியல் காரணமாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை பிரதான சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் இன்று காலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி திருநெல்வேலி சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துலட்சுமி தலைமையில் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் கீழ்புறம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 6 ஆண்கள் உள்பட மொத்தம் 54 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

1 More update

Next Story