தர்மபுரி வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்டது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு பல்வேறு வகையான வனவிலங்குகள், பறவைகள் உள்ளன.
இந்நிலையில், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது.
இதையடுத்து, மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூராய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது குறித்து தருமபுரி மாவட்ட வனத்துறை வெளியிட்ட அறிகையில், ஒகேனக்கல் வனப்பக்குதியில் உயிரிழந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. அந்த சிறுத்தையின் வலது கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதனால் சிறுத்தை உயிரிழந்துள்ளது. சிறுத்தையின் மாதிரிகளை சேகரித்து வண்டலூர் தடய ஆய்வகத்திற்கு பகுப்பாய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






