‘ஜனநாயகன் படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


‘ஜனநாயகன் படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
x

ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதை மக்கள் உணர முடியும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.

கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, திரைப்படத் தணிக்கைக் குழுவை வலிறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story