ஈரோட்டில் சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் வைப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

திருப்பூர் குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரன் அவர்களின் திருவுருவச்சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைக்குத் 'தியாகி குமரன் சாலை' என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
இன்னுயிரைவிடவும் தன்மானமும் தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூர்_குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






