தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்: மு.க.ஸ்டாலின்

இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்! #வெல்வோம்_ஒன்றாக!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






