‘கூட்டணி குறித்து 30 நாட்களில் நல்ல செய்தி’ - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தை மாதத்தில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வந்து சேரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கூட்டணி அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “தை பிறந்தால் வழி பிறக்கும். இன்றுதான் தை பிறந்திருக்கிறது. தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த 30 நாட்களில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வந்து சேரும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, “எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?” என்ற கேள்விக்கு, “அதை மக்கள் முடிவு செய்வார்கள்” என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Related Tags :
Next Story






