ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் விஜய் "ஏ பா.ஜ.க. அரசே" என்று பொங்க மாட்டார்: எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்


ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் விஜய் ஏ பா.ஜ.க. அரசே என்று பொங்க மாட்டார்: எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்
x
தினத்தந்தி 9 Jan 2026 11:27 AM IST (Updated: 9 Jan 2026 11:29 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார் என விஜய் குறித்து எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளப்பதிவில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் குறித்து கூறியிருப்பதாவது:

கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார். இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறி வைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், "ஏ தி.மு.க. அரசே!" என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், "ஏ பா.ஜ.க. அரசே!" என்று பொங்க மாட்டார். எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள். பொங்கலோ பொங்கல்!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story