திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை


திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
x

திருவள்ளுவர் தினத்தையொட்டி விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2025-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது சிந்தனைச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்கான காமராஜர் விருது, எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட்டது.

2025-ம் ஆண்டுக்கான பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்பட்டது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் ஆகிய பன்முக ஆற்றலைக் கொண்டவர்.

2025-ம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்பட்டது. இவர் இரண்டாயிரம் திரைப்பட பாடல்களை எழுதிய பாடலாசிரியர். மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார்.

2025-ம் ஆண்டுக்கான தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்பட்டது. 2025-ம் ஆண்டுக்கான கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பாவுக்கு வழங்கப்பட்டது.

2025-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது, விடுதலை விரும்பிக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.

1 More update

Next Story