எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. குழு இன்று சந்திப்பு

பா.ஜ.க.விடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. தரப்பில் குழு அமைக்கப்பட உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச உள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீட்டுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த உள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அ.தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.விடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட உள்ளது. இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்ட பிறகு, அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்.
பா.ஜ.க. தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் கட்சியின் மூத்த தலைவர்கள், துணைத்தலைவர்கள், மாநில நிர்வாகிகள் இடம்பெற உள்ளனர். அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. பொங்கலுக்கு பிறகு தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியாகும் என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






